Wednesday, February 10, 2010

காதலர் தினச் சிறப்பு காதல் கவிதைகள் - 1

நம் காதல்

உன் உச்சந்தலைபரப்பு எனும் சோலையில் விழித்தெழுந்து !!!

உன் நெற்றிபரப்பு எனுன் தகவல் பலகையில் என் நிகழ்ச்சி நிரலை தெரிந்துகொண்டு !!!

உன் விழிகள் எனும் சூரிய ஒளியில் என் பயணத்தின் பாதையை அறிந்து கொண்டு !!!

உன் உதடுகளின் அசைவினால் உற்பத்தியாகும் கட்டளைகளை கவனத்தில் கொண்டு !!!

உன் காதின் பொன் வளையங்கள் எழுப்பும் ஓசையின் உதவி கொண்டு !!!

உன் இதயத்தை மட்டுமே இலக்காக நினைத்து கொண்டு !!!

இவ்வுலக முடிவுவரை நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம் !!!!!!

"நம் காதல் "


--- மகி

இதயத்தில் என்னவள்

சுற்று

சூரியனை சுற்றும் பூமியாய்
"நான்"
நான் சுற்றி வரும் சூரியனாய்
"நீ"
----மகி

அழகிய வனவாசம்

ஒளிபுகமுடியாத அடர்ந்த காடு.....

அதை
நான்கே ஈரடுக்கு அறைகளாக பிரிக்கும் கொடிகள்!

அதனுள்
எப்பொழுதும் இடைவிடாது பாயும் ஆறு!

அதை
பாதுகாக்க வரிசையாய் போர்வீரர்கள்!

அவர்களுக்கு
பாதுகாப்பாக மேல் போர்த்திய கவசம்!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வனத்தில்

வனவாசம் செய்யும் தேவதையாய் ! என்னவளே நீ !

என் இதயத்தில் எப்போதும் நீ, நீ மட்டும் தான்!

--- மகி

காதல் - ஓர் அதிசயம்

காதல்!!!
இந்த மூன்று எழுத்து மந்திரச்சொல்
எத்தனை வேலைகள் செய்கிறது!!!!

ஓர் இளைஞனின் உயிரைத்தட்டித் திறக்கும் சாவியாய்!

ஒருவனுக்கு தாரம் எனும் இன்னொரு தாயைத் தரும் கடவுளாய்!

வழி தெரியாத ஒருவனுக்கு திசைகாட்டும் கருவியாய்!

அமாவாசையின் இருளில் ஓர் அதிசய நிலவொளியாய்!

சூரியனில் மிதக்கும் வானவில்லின் வர்ணஜாலமாய்!

உயிருக்குள் இன்னொரு உயிராய்!

காதல்!!!
ஓர் அதிசய வேதியியல் மாற்றம் !!!!!!...........

--- மகி


ஓர் இதயத்தின் ஊஞ்சலாட்டம்.....


போதிமரத்தடியில்
உச்சிப்பிள்ளையார்
தேடுகிறேன்!

ஆலமரத்தடியில்
ஆழ்ந்த அறிவைத்
தேடுகிறேன்!

---
கணிப்பொறியின் ஒளித்திரையில்
உன் கூந்தலின் ஒற்றை ரோஜா
தேடுகிறேன்!

விண்வெளியில் வேறொரு நிலவை
விரட்டி விரட்டித்
தேடுகிறேன்!

---
கருப்பு வெள்ளை
வானவில் காண்கிறேன்!

கலவை நிறத்தில்
நிலவை ரசிக்கிறேன்!

---
வெளிச்சக்கூட்டில் ஒளிந்து கொள்ள
ஓர் மறைவைத்
தேடுகிறேன்!

விதவை வானில் விடிய விடிய
வெளிச்சம்
தேடுகிறேன்!

---
உன் வீட்டு வாயில் திறக்கும் வேளையில்
செவ்வாயில்
ஜீவிக்கிறேன்!

கடவாயில் நீர் வடிய
கனவுலகில்
நான் வசிக்கிறேன்!

---
ஒரு காலில் ஆண் செருப்பும்
மறுகாலில் பெண் செருப்புமாய்
ஜோடி சேர்த்துப் பார்க்கிறேன்!

தொலைபேசி சிரிக்கும்போதெல்லாம்
தொடர்பில் நீ இல்லையென்றால்
தொலைந்து போகிறேன்!

---
என் கவிதைத் தொகுப்பிற்குள்
உன் கால் கொலுசின்
தடம் தேடுகிறேன்!

என் இளமை பூந்தோட்டத்தில்
உன் உருவத்தில்
மலர் தேடுகிறேன்!

---

பிறப்பின் மகிழ்ச்சிக்கும்
இறப்பின் இரங்கலுக்கும்
இடையில்
என் இனிய இளமைப் பருவத்தில்
ஏன் இந்த இதயத்தில்
ஊஞ்சலாட்டம் ?.....


காதலிக்கத் தொடங்கிவிட்டேனா ?????.....

----- மகி


நீ

ஒவ்வொரு நாளின்
தொடக்கமும், முடிவும்,
உன் முகமே தெரிகிறது !!!!!

சந்திரன், சூரியன் வடிவில் "நீ"

உலகம் சுற்றும் வாலிபன்

நான் தான் உண்மையான
" உலகம் சுற்றும் வாலிபன் " !!!!!!!
என் உலகமாய்

"நீ"


-
மகி

பொறாமை

மலர்கள்.....
தற்கொலை செய்து கொள்ளும் அதிசயம்.....!!!!!
உன் வீட்டில் மட்டுமே காண கிடைக்கும்...????
உன் மேல் பொறாமை!!!!!!!!!!!

-மகி

தேடல்

தேடுதலில் தொடங்கி....
தேடுதலிலேயே முடியும்.....
இம்மனித வாழ்க்கையில் .,
நான் தேடிக்கண்டறிந்த அரிய பொக்கிஷம்.,,,

நீ .......!!!!

கண்ணாடி

என் வீட்டுக்கண்ணாடிக்கு இனி வேலையில்லை.....
என் முகம் பார்க்கிறேன்!
உன் முகத்தில் !!!!

No comments:

Post a Comment