Thursday, February 11, 2010

தமிழ் திரைப்படங்களில் வந்த சிறந்த காதல் பாடல்கள் ஒரு தொகுப்பு - 2

உனக்கென இருப்பேன். உயிரையும் கொடுப்பேன்.
நா.முத்துக்குமார்

படம்: காதல்

உனக்கென இருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்,
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, கண்மணியே!
அழுவதேன்?... கண்மணியே!
வழித்துணை நான் இருக்க...

கண்ணீர் துளிகளைக், கண்கள் தாங்கும் - கண்மணி
காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் - என்றுதான்
வண்ணத்துப் பூச்சிகள் பார்த்திடுமா?
மின்சாரக் கம்பிகள் மீதும்,
மைனாக்கள் கூடு கட்டும்,
நம் காதல் தடைகளைத் தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை,
வரும் காலம் காயம் ஆற்றும்.
நிலவொளியை மட்டும் நம்பி,
இலையெல்லாம் வாழ்வதில்லை,
மின்மினியும் ஒளி கொடுக்கும்!

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் - தோழியே!
இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது - எதிர்வரும்
துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெந்நீரில் நீர் குளிக்க,
விறகாகித் தீக் குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.
விழி மூடும் போதும் உன்னை,
பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆனேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.

- நா.முத்துக்குமார்


ஒரு வெட்கம் வருதே வருதே
தாமரை

படம்: பசங்க

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே

போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
(மழை இன்று..)

ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்தினை நீயும் மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
(ஒரு வெட்கம்..)

- தாமரை


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
நா.முத்துக்குமார்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் அய்யோ தொலைந்தேன்

( காதல் வைத்து )

தேவதை கதை கேட்ட போதெல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்

( காதல் வைத்து )

உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்,
உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்,
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

( காதல் வைத்து )

- நா.முத்துக்குமார்


என் மேல் விழுந்த மழைத் துளியே
வைரமுத்து

படம் : மே மாதம்


என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே...

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே...

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே...

- வைரமுத்து


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
நா.முத்துகுமார்
படம்: அயன்

விழி மூடி யோசித்தால்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணைக் கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

- நா.முத்துகுமார்


ஆசையிலே பாத்தி கட்டி
கங்கை அமரன்
படம் : எங்க ஊரு காவல்காரன்

ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி..
ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி..
நானா பாடலியே.. நீதான் பாட வச்சே..

வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது...
பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு
விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு
நீ வாயேன் வழி பாத்து

கண்ணுதான் தூங்கவில்லை.. காரணம் தோணவில்லை
பொண்ணு நான் ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை
கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்லை
கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி.. நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே

- கங்கை அமரன்


பனி விழும் மலர் வனம்
வைரமுத்து

படம் : நினைவெல்லாம் நித்யா

பனி விழும் மலர் வனம்


பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம் ஏஹே
இனி வரும் முனிவரும்
தடுமாறும் தனிமரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்

காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம்
காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

- வைரமுத்து


படம்: தாம் தூம்

பாடல் : அன்பே என் அன்பே

ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்...
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்...
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

(இசை...)

ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திட வேண்டும்
உந்தன் கரை தொட பிழைத்திட வேண்டும்
அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்...
மனதினிலே இருப்பதெல்லாம்
மவுனத்திலே கலக்கும்... (அன்பே என் அன்பே...)

(இசை...)

ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்துடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
எதைக் கொடுத்தோம்... எதை எடுத்தோம்...
தெரியவில்லை கணக்கு...
எங்கு தொலைந்தோம்... எங்கு கிடைத்தோம்...
புரியவில்லை நமக்கு... (அன்பே என் அன்பே...)


படம்: பீமா
பாடல் : முதல் மழை


ஆண்: முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..

பெண்: இம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்.. ம்.. இதயமாய் மிதந்ததே...யே..


ஆண்: கனவோடு தானடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னை படம் எடுத்தேன்...

பெண்: ஆ...ஆ..

ஆண்: என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...

பெண்: எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையால்..
காற்றோடுதான் நானும் பறந்தேன்..
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்..

ஆண்: முதல் மழை எனை நனைத்ததே..
பெண்: லாலாலாலா..

ஆண்: முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெண்: லாலாலாலா..

ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே...
இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே...

பெண்: ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ஒ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை....

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உந்தன் நெருக்கம்....
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்...

பெண்: ஊ.....
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

பெண்: ஊ.....
ஆண்: இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே...

- நா.முத்துக்குமார்

2 comments:

Unknown said...

அனைத்து பாடல்களும் அருமை..

Anonymous said...

எப்பிடி இவ்வளவையும் டைப் பண்ணின சுப்பர்

Post a Comment