கவிதை எழுதியவர் :::: மீரா
உச்சிமுதல் பாதம் வரை
உன்னுடைய நினைவுகள்
மெச்சிவிட சொல்லுதடா
மேனியும் கூசுதடா
உன்னுடைய நினைவுகள்
மெச்சிவிட சொல்லுதடா
மேனியும் கூசுதடா
கன்னதில் முத்தமிட்டாய்
கற்பனையில் சத்தமிட்டாய்
கட்டி அனைக்கவே என்
கைகளில் சிக்கவில்லை
கற்பனையில் சத்தமிட்டாய்
கட்டி அனைக்கவே என்
கைகளில் சிக்கவில்லை
பூட்டிவைத்த ஆசைகளை
பத்திரமாய் சேர்த்து வைப்பேன்
பக்குவமாய் சொல்லிவிட
பாவை இவள் ஏங்குகிறேன்
பத்திரமாய் சேர்த்து வைப்பேன்
பக்குவமாய் சொல்லிவிட
பாவை இவள் ஏங்குகிறேன்
கண்ணன் முகம் காணவில்லை
கைபிடிக்கும் நாளை எண்ணி
காதலில் தான் வாழுகிறேன்...
----------------------------------------------------------------------
என் கவிதை..!
247 எழுத்துக்கள் !!!
ஒரு லட்சம் வார்த்தைகள்!!!
ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான வரலாறு!!!
இத்தனையும் நிறைந்துள்ள என் தாய் மொழி தமிழில் ..
உன் பெயரில் உள்ள நான்கு எழுத்துக்களைத் தவிர
வேறொன்றும் ஞாபகம் வரவில்லை!!!
... உன்னைப் பற்றி கவிதை எழுத நினைத்தபோது ?!!!
--- மகி
---------------------------------------------------------------------
காதல் கவிகள்
***
பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம் !
***
நிம்மதியில்லை
என்றதும்
கோவிலுக்குப்
போகச்சொன்னான் நண்பன்!
போனேன்
முதன்முதலில்
அவளைப் பார்த்த
பேருந்து நிறுத்தத்திற்கு!
***
உள்ளாடையைத்
தேர்ந்தெடுக்கக்கூட
இவ்வளவு நேரமா?
நீயெல்லாம்
பெண் பார்க்கப்போனால்...
எத்தனை பெண்தான் பார்ப்பாயோ..
என்பார்கள் நண்பர்கள்!
அவர்களுக்கென்ன தெரியும்
பார்த்த முதல் வினாடியே
உன்னைத்
தேர்வு செய்துவிட்டேன்
என்பது!
***
தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!
***
அருவி
மலைக் காதலிக்கு
மழைக் காதலன்
சூட்டிய
மல்லிகை !
***
அவள் எனக்கு பிடிக்கவில்லை !
எத்தனை
பெண் பார்க்கும் படலம்
என்னவளுக்கு ...
விரைவில்
வீட்டில்
சொல்லியாக வேண்டும்!
உன்னை
பார்த்துவிட்டுச் சென்ற
எல்லோரும்
"அவள் எனக்கு பிடிக்கவில்லை"
என்றுதான்
சொல்லியிருக்கிறார்கள் ...
ஆமாம்...
யாருக்குமே
பிடிக்காத உன்னை
எனக்கு மட்டும்
எப்படி பிடித்துப் போனது?
ஓ..
இதுதான்
காதலோ !!!
***
உழவன்
------------------------------------------------------------
வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…
மேல் இதழ் முதல்வரி
கீழ் இதழ் மறுவரி
உன் இதழ்கள்
எனக்கான இருவரி கவி
*
நீ
அழகுக்கான
அளவுகோல்!
*
கவிதைகளில்
உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்
உன்னழகை எழுதும் வேளைகளில்.
*
தூண்டிவிடுவது என்னவோ
உன்னழகு
பழி மட்டும் என் மேல்.
*
கைகட்டி அமர்ந்திருக்கிறாய்
நல்ல பிள்ளையாய்;
உன் அழகு போடுகிறது
குத்தாட்டம்!
*
நான் கொள்ளை அடிக்க அடிக்க
கொஞ்சமும் குறைவதில்லை
உன்னிடம் அழகு…
*
உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…
*
- ப்ரியன்.
----------------------------------------------------------------------------------
காதலன்றி வேறென்ன? - கண்மணி
- கண்மணி
மாலை மயங்கும் பொழுதில்
மழை சிந்தும் குளிரில்
மாட முற்றத்தில்
நீ தந்து
நான் அருந்தும்
தேநீரில்...
நீண்ட பயணத்தில்
இரவு நேரத்தில்
எதிரெதிர் இருக்கையில்
நீ அனுப்பி
நான் சிலிர்க்கும்
பார்வையில்...
தாளாத தலை வலியில்
தாய் போன்ற உன் மடியில்
தானாக எனை ஏந்தி
நீ தேய்த்து
நான் உணரும்
விரலில்.....
இதோ
இந்த
மூச்சு முட்டும்
நெஞ்சடைக்கும்
தலை சுற்றும்
நம்
முதல் பிரிவில்...
எங்கும்
எதிலும்
நம்மோடு
பின்னி பிணைந்து
வேரோடி
விருட்சமாய்
நிற்பது
காதலன்றி
வேறென்ன?
-----------------------------------------------------------
கறுக்கும் தாஜ்மகால்! - தேஜூ உஜ்ஜைன்
- தேஜூ உஜ்ஜைன்
சிரிக்காதேயேன்
ப்ளீஸ்..!
நீ சிரிக்கையில் சிந்தி விடப்போகின்றன
உன் இதழ் முழுவதும் காத்திருக்கும்
எனக்கான முத்தங்கள்...
உன்னைச் சிரிப்பூட்டவும்
பயமாயிருக்கிறது எனக்கு
*
17 முறை
படையெடுத்துத் தோற்றாலும்
கடைசிப் போரில்
வென்றவன் தான் கஜினி
உன்
காதலைப் பொறுத்தவரை
நான்
கஜினி வம்சம்
*
அப்படிப் பார்க்காதேயேன்
ப்ளீஸ்...
உன்னை தரிசிப்பதை
விட்டுச் சாக
விருப்பமில்லை எனக்கு!
*
தாஜ்மகால்
மெல்ல மெல்ல
கறுத்து வருகிறதாமே...
வருத்தப்படுகிறார்கள்
சுற்றுச்சூழலியளாளர்கள்
நல்ல வேளை
உன்னைத் தாஜ்மகால்
பார்க்கவில்லை
பார்த்திருந்தால்
வெட்கப்பட்டு
உடனே கறுத்திருக்கும்!
*
-----------------------------------------------------------
காதல் கவிதைகள் - தேஜூ உஜ்ஜைன்
- தேஜூ உஜ்ஜைன்
எல்லோருக்கும் புத்தாண்டு
ஜனவரி 1ல் வருகிறது
உனக்கு மட்டும் ஏன்
பிப்ரவரி 14ல்
என்று கேட்கிறார்கள்
சொல்லிவிடவா அவர்களிடம்?
உன்னுடனான என் காதல்
பூத்த தினம்தான்
என் புத்தாண்டு என்று?
*
கல்யாண வீட்டின்
வாசலிலேயே
தயங்கி அமர்ந்துவிட்ட
என்னை
உள்ளே அழைக்கும்
அம்மாவிடம்
எப்படிச்சொல்வது?
உன்னை
நினைவுபடுத்திவிட்ட
ரோஜாக்களை
விட்டுவிட்டு
எப்படி வர
என்று...
*
என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...
ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை...
*
உன்னுடனான
என் முதல் சந்திப்பில்
நான் சேர்த்து வைத்திருக்கும்
சின்னஞ்சிறு
வால் நட்சத்திரங்களை
உனக்குப் பிரத்யேகமாயப்
பரிசளிப்பேன்
ஒவ்வொரு முறையும்
எனைப்பார்க்க வருகையில்
எடுத்து வந்து
என் கனவில் நீ
விட்டுச்சென்றவை அவை.
*
விளையாடும் போது
அவ்வப்போது
திரும்பி எனைப்பாரேன்
அந்த கணப்பொழுதில்
எனைச் சுற்றியோர்
ஒளிவட்டம் தோன்றுவதாய்ப்
பிரமையேற்படுகிறது எனக்கு
*
---------------------------------------------------------

2 comments:
ஃபீலிங் ரொம்ப உங்களை படுத்தி இருக்குன்னு தெரியுது.
கலெக்ஷன் நல்லாதான் இருக்கு. எங்கயாவது இருந்து எடுத்துப்போட்டீங்கன்னா எங்களுக்கும் ஒரு தகவல் சொல்லுங்களேன். புண்ணியமாப்போகும்.
Post a Comment